Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தந்தையை மறந்த பெண் அமைச்சர்

 தந்தையை மறந்த பெண் அமைச்சர்

துாத்துக்குடி தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவன், வேட்பாளர் அறிவிப்புக்கு பின், சென்னையில் இருந்து துாத்துக்குடி சென்றதும், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்ததோடு, முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.

திருச்செந்துார் தொகுதி தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் வேட்பாளர் ராமஜெயம் ஆகியோர் துாத்துக்குடி சென்றதும், போல்பேட்டை பகுதியில் அமைந்திருக்கும் மறைந்த தி.மு.க., முன்னாள் மாவட்டச் செயலரும், அமைச்சர் கீதா ஜீவனின் தந்தையுமான பெரியசாமி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்த தகவல் கிடைத்த பிறகே, தன் தந்தையின் ஞாபகம், கீதா ஜீவனுக்கு வந்துள்ளது. உடனே, ஆதரவாளர்களுடன் சென்று, தந்தை நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Advertisement