Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பெரம்பூரில் இன்று விஜய் பிரசாரம் ரத்து

 பெரம்பூரில் இன்று விஜய் பிரசாரம் ரத்து
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்

பெரம்பூரில் இன்று (ஏப்ரல் 18) வீடு வீடாக சென்று விஜய் பிரசாரம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூரில், த.வெ.க., தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. விஜய், தேர்தல் பணிமனைக்கு நேற்று சென்று பார்வையிட்டார்; கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பணிமனை முன், பெண்களுடன் இணைந்து, தன் கட்சியின் 'விசில்' சின்னத்தை விஜய் கோலமாக போட்டார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) பெரம்பூரில் விஜய் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து, பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டது என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் மற்றும் போலீசார் சார்பில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், திடீரென பிரசாரம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே, தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில், நாளை விஜய் பிரசாரம் செய்கிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து, கிழக்கு தொகுதியில் திறந்தவெளி வாகனத்தில் விஜய் சென்று ஓட்டு சேகரிக்க உள்ளார்.

Advertisement