'நாங்களே ஜெயிப்போம்': தி.மு.க., கருத்து திணிப்பு
தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும் பணிகளை, அக்கட்சி தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல், 23ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., என, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
த.வெ.க., பெறும் ஓட்டுகள், எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாததால், எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பதை கணிக்க முடியாமல், அனைத்து கட்சியினரும் திணறி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த, அக்கட்சி முயற்சித்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் எடுத்த கருத்து கணிப்பில், தி.மு.க., கூட்டணி 178 இடங்களில் வெற்றி பெறும் என்ற தகவலை அனைவருடைய மொபைல் போன்களிலும் பரப்பி வருகின்றனர்.
இது தவிர பல்வேறு அமைப்புகள் வழியே, கருத்து கணிப்பு எடுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க.,45 சதவீத ஓட்டுகள் பெறும்; அ.தி.மு.க., 36 சதவீத ஓட்டுகளைப் பெறும். தி.மு.க., பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற தகவலையும் பரப்பி வருகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்