நட்சத்திர பேச்சாளர்கள் 406 பேருக்கு பிரசார அனுமதி
சென்னை: கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள், 406 பேருக்கு பிரசாரம் செய்ய, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 40 பேர்; த.மா.கா.,வில் தலைவர் வாசன் உள்ளிட்ட 16 பேர்; இ.கம்யூ.,வில் மாநில செயலர் வீரபாண்டியன் உள்ளிட்ட 40 பேர்; சசிகலாவின் கட்சி சார்பில் 20 பேர் பிரசாரம் செய்ய அனுமதி பெற்றுள்ளனர்.
இதேபோல, அ.தி.மு.க., சார்பில், பொதுச்செயலர் பழனிசாமி, நடிகையர் விந்தியா, கவுதமி உள்ளிட்ட 40 பேர், த.வெ.க.,வில் தலைவர் ஜோசப் விஜய், செங்கோட்டையன் உள்ளிட்ட 20 பேர், அ.ம.மு.க., சார்பில் தினகரன் உட்பட 16 பேர் அனுமதி பெற்றுள்ளனர்.
தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளில் அனுமதி பெற்றவர்கள் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்