Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


குடும்பத்திற்கு ரூ.60,000 பயன்; அ.தி.மு.க., துண்டு பிரசுரம்

குடும்பத்திற்கு ரூ.60,000 பயன்; அ.தி.மு.க., துண்டு பிரசுரம்

சென்னை: 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், குடும்பத்திற்கு 60,000 ரூபாய் நேரடி பலன் கிடைக்கும்' என, வீடு வீடாக, அக்கட்சியினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.

'தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றால் இல்லத் தரசிகளுக்கு 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும்' என , அக்கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து, தி.மு.க., கூட்டணி கட்சியினர், 8,000 ரூபாய் மாதிரி கூப்பனை அச்சடித்து, வீடுதோறும் வழங்கி வருகின்றனர்.

இதற்கு போட்டியாக, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், குடும்பத்திற்கு 60,000 ரூபாய் நேரடி பலன் கிடைக்கும் என, அக்கட்சியினர் வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்து வருகின்றனர். மேலும், 10,000 ரூபாய் காசோலை போன்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வினர் வினியோகம் செய்யும் துண்டு பிரசுரத்தில், 'குடும்ப உதவித்தொகை 10,000 ரூபாய், மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 24,000 ரூபாய்; இலவச சிலிண்டருக்கான தொகை 3,000, ரேஷனில் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய்க்கு 3,000, இலவச பஸ் பயணம் வாயிலாக சேமிப்பு 6,000 ரூபாய், பொங்கல் பரிசு 2,000 ரூபாய், இலவச பிரிஜ் 12,000 ரூபாய் என மொத்தம், 60,000 ரூபாய் நேரடி பலன் கிடைக்கும்' என, கூறப்பட்டு உள்ளது.

Advertisement