Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்டும் தேர்தல்!

திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்டும் தேர்தல்!

பு.ரவிராஜ், 20 கடை ஊழியர், நெல்லிக்குப்பம், கடலுார்

என்னை பொறுத்தவரை, இந்த தேர்தல் திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இருக்கும். இதுவரை ஆட்சியில் இருந்த தி.மு.க. - அ.தி.மு.க.,வினர் தான் பணக்காரர்களாக மாறியுள்ளனர். இலவசங்களை எதிர்பார்க்கும் அளவுக்கு இன்னும் மக்களை ஏழைகளாகவே வைத்துள்ளனர். இதை மாற்றுவது தான் எங்களை போன்ற இளைஞர்களின் நோக்கம். இரண்டு கட்சிகளின் ஆட்சியிலுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

புதிய கட்சிகளாக நாம் தமிழர், நடிகர் விஜயின் த.வெ.க., உள்ளன. இதில் சீமானை விட விஜய்க்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் விஜய், பெண்கள் முன்னேற்றத்துக்கு பல அறிவிப்புகளை கொடுத்துள்ளார். அவர் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். ஆட்சி செய்த இரு கட்சிகளும், பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கின்றன. விஜய், மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறார். ஒரு சினிமாவுக்கு பல நுாறு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த விஜய், அதை விட்டுவிட்டு மக்கள் பணிக்கு வந்துள்ளார். அவர் ஆட்சிக்கு வந்தால், லஞ்சம், ஊழல் இருக்காது என நம்புகிறேன்.

Advertisement