நீட் தேர்வு ரத்தாகும்னு நம்பினோம்!
எஸ்.பர்வதாம்பிகா, 18 கல்லுாரி மாணவி, குன்னுார், நீலகிரி
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அரசியலை கவனிக்க ஆரம்பிச்சேன். அப்போ, ஸ்டாலின் சார் உண்மையிலேயே கண்டிப்பா பெரிய மாற்றத்தை கொண்டு வருவாருன்னு நம்பினேன். ஓட்டு போடற வயசு இல்லன்னாலும் சப்போர்ட் பண்ணினேன். ஆனா, லாஸ்ட் பைவ் இயர்ஸ்ல ரொம்ப கஷ்டப்படற அளவுக்கு தமிழ்நாட்டுல நிறைய மோசமான விஷயங்கள் நடந்திருக்கு.
இத பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. சின்ன சின்ன பசங்க கூட கஞ்சா, போதைக்கு அடிமை ஆயிட்டாங்க. வயசானவங்கள கூட விட்டு வைக்காம பாலியல் தொல்லை அதிகமாகிருச்சு. திருட்டு, கொள்ளை, கொலை இப்படி மோசமா நடந்துக்கிட்டு இருக்கு. இதுக்கெல்லாம் இன்னும் முற்றுப்புள்ளி வைக்கல.
நல்லது செஞ்சிருக்கோம்னு சொல்றாங்க. ஆனா அவங்க குடும்பம் தான் வசதியாயிருக்காங்க. நீட் தேர்வையும் ரத்து பண்ணுவாங்கன்னு நம்பினோம். இந்த முறை ஒரு புது மாற்றத்தை எதிர்பார்க்கறேன்.
விஜய் சாருக்கு தான் என் முதல் ஓட்டு. அவரோட தனிப்பட்ட விஷயங்கள் எனக்கு முக்கியமில்ல.
Advertisement

காலம் காலமாக திமுக இதுபோன்ற சதுரங்க வேட்டையில் மக்களை சிக்கவைத்து ரசிக்கும் .. ரூபாய்க்கு மூணுபடி அரிசி ..கூவத்தில் படகு விடுவோம் ..நீட் தேர்வை ரத்து செய்வோம் .. கட்சதீவை மீட்போம் .. இலங்கை தமிழர்களுக்கு நீதிகிடைக்க செய்வோம் ...காவிரிநதி நீர் பிரச்சனையையோ தீர்ப்போம் ... திமுக இன்னும் மக்களை 1977 இல் இருப்பதாக நினைத்து க்கொண்டு அரசியல் செய்கிறது ... ஆப்பு காத்திருக்கிறது ..