இலவச பஸ் பயணத்தில் பெண்களை மதிப்பதில்லை!
காவியதர்ஷினி, 19 திண்டுக்கல்
இதுவரை, அ.தி.மு.க., -- தி.மு.க., ஆகிய இரு கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. அவர்கள் செய்வது அனைத்தும் தெரிகிறது. புதிதாக விஜய் வந்தால் என்ன செய்வார் என பார்க்க வேண்டும். நான் விஜய் ரசிகை. விஜய் நடித்த அனைத்து படங்களையும் பார்த்து விடுவேன். விஜயின் அரசியல் படங்கள் அனைத்துமே நன்றாக இருந்தன. எங்களுக்கு இலவச பஸ் பயணம் என்றாலும், நிறுத்தங்களில் முறையாக பஸ்களை நிறுத்துவதில்லை. கட்டணமில்லாமல் பயணிப்பதால் பெண்களையும் மதிப்பதில்லை.
பழனி கோவிலுக்கு சுற்றுலாப் பயணியர் அதிகம் வருவதால், இங்கே, சுற்றுலா துறை சார்பில் போதிய வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. விவசாய நிலங்கள் அதிகம் உள்ள நிலையில், விளைந்த பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிகள் குறைவாக உள்ளன. எங்கள் பகுதியில் குடிநீர் கலங்கலாக வருகிறது. பழனி பகுதியில் தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரவில்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண விஜய்க்கே ஓட்டு போடுவேன்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்