விஜயால் இளைஞர்களிடம் அரசியல் புரட்சி!
பிளஸ்லி, 24 என்.ஜி.ஓ., காலனி, திண்டுக்கல்
கடந்த 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், இன்னமும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாத கிராமங்கள், பள்ளிகள், பஸ் போக்குவரத்து இல்லாத ஊர்கள் இருக்கின்றன. இவை, சரிசெய்ய முடியாத பிரச்னைகள் அல்ல. ஆனால், நிவாரணத்துக்காக மக்களை எதிர்பார்க்க வைப்பதும் ஏங்க வைப்பதும் தான் தவறு.
அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய பெரிய கட்சிகளை தவிர, இங்கு வேறு யாராலும் ஆட்சிக்கு வர முடியாது என்ற பிம்பத்தை, அரசியல் என்ட்ரியால் உடைத்தவர் விஜய்.
கட்சி தொடக்கம், கொடி, பெயர் அறிமுகம், உறுப்பினர் சேர்க்கை என எல்லாமே 2026 தேர்தலை முன்வைத்து தான் என்பதை, விஜய் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிட்டார்.
இலவசங்கள் மீது நம்பிக்கை இல்லை. விஜயால் இளைஞர்கள் மத்தியில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளதை நம்புகிறேன்.
அது, மக்களுக்கு தேவையானதை செய்ய வைக்கும். அனுபவம் இல்லை, அரசியல் தெரியவில்லை என்று சொல்லி ஒதுக்குவதை விட அவரை ஆதரித்து பார்க்கலாம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்