பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் நல்லது!
அருண், 27 பொன்னங்குப்பம், விழுப்புரம்
பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றனர். 50,000 பேருக்கு கூட கிடைக்கவில்லை. டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை சரியாக நடத்தவில்லை. குரூப் 2 தேர்வை ரத்து செய்து விட்டனர். ஐந்தாண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. பழனிசாமி, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லுாரிகளைக் கொண்டு வந்தார். அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில, 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்.
தி.மு.க., அரசு கடந்த தேர்தலில் 525 வாக்குறுதிகளை வெளியிட்டது. அவற்றில், 15 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியதாக அவர்களே கூறியுள்ளனர். அவர்கள் சொன்ன வாக்குறுதிகள், அவர்களுக்கே நினைவில் இருக்குமா என கேட்க வேண்டும். மக்கள் மறந்து விட்டனர். இந்த தேர்தலிலும் அதே வாக்குறுதிகளை கூறியுள்ளனர். அவற்றில் எத்தனை நிறைவேற்றுவர் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆகவே இந்த தேர்தலில், பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் வரவேண்டும். அப்போதுதான் வளர்ச்சியைநோக்கி நகர முடியும்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்