Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பார்ட்டி, பாலிசி மேக்கிங் என்றால் தி.மு.க., தான்!

பார்ட்டி, பாலிசி மேக்கிங் என்றால் தி.மு.க., தான்!

சி.பி.சந்தோஷ் லால், 26 மதுரை
விஜய் புதிய கட்சி தொடங்கியதும் யார் யாரை வேட்பாளராக நிறுத்துகிறார் என்று ஆர்வமாக பார்த்தேன். அவரைத் தவிர உடனுள்ள நிர்வாகிகள் பெரும்பாலும் வெவ்வேறு கட்சிகளில் இருந்து வந்த பழைய முகங்கள் தான்.

ஒவ்வொருவரும் அந்த கட்சியில் எப்படி மக்கள் செல்வாக்குடன் இருந்தனர் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான். உண்மையிலேயே தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றான கட்சியாக இருக்க வேண்டுமென விஜய் நினைத்திருந்தால், அவரைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் புதுமுகங்களாகவும் இளையோராகவும் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவரது கட்சிக்குள் தான் முதலில் மாற்றம் வரவேண்டும்.

கல்லுாரி மாணவியருக்கான உதவித் தொகை, திருநங்கையருக்கான உதவித்தொகை ஆகியவை நல்ல திட்டங்கள். இலவச பஸ் பயணத்திலும் திருநங்கையருக்கு அனுமதி உள்ளது. இக்கட்சியில், பெண்களுக்கான முக்கியத்துவம் சற்று அதிகமாக உள்ளது. எனவே பார்ட்டி, பாலிசி மேக்கிங் என்றால் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போடுவேன்.

Advertisement

ஏப் 18, 2026 09:59 am

Educated Bruts from TASMAC NADU, thinking of self and not for welfare of society.

Reply Rate this