என் ஓட்டு பா.ஜ.,வுக்கே!
எஸ்.எம்.கமலேஷ், 19 கல்லுாரி மாணவர், பொள்ளாச்சி, கோவை
முதல் முறையாக சட்டசபை தேர்தலில் ஓட்டு போட போறேன். இப்போ நடக்கும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு சுத்தமாகவே இல்லை. பெருசா ஏதாவது நடந்தாலும் நடவடிக்கை எடுக்க லேட் பண்றாங்க.
ஊழல் அதிகமாகி போச்சு. போன தடவை அறிவிச்ச தேர்தல் வாக்குறுதியையும் பெரும்பாலும் நிறைவேற்றாமல் விட்டுட்டாங்க. இளைஞர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு இல்லை.
இப்போ இருக்கற நிலைமைக்கு, ஒரு மாற்றம் வேணும். அதுக்கு நான் பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு போடுவேன்.
என்ன காரணம்னா, மாநிலங்களுக்குள்ள சின்ன சின்ன பிரச்னை வந்தாலும் அதை சரி பண்ணிடறாங்க. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நிறைய திட்டங்கள் செயல்படுத்தறாங்க. நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கறாங்க. மாணவர்கள், பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்க.
படிச்சு முடிச்சதும் தொழில் துவங்க கடன் கொடுக்கறாங்க. தொழில் வளர்ச்சிக்கு நிறைய சப்போர்ட் பண்றாங்க. அதனால, இந்த தேர்தல்ல என் ஓட்டு பா.ஜ.,வுக்கே.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்