Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜயோட அரசியல் பாதை மாறிடுச்சு

விஜயோட அரசியல் பாதை மாறிடுச்சு

அ.முஹமது தானிஷ், 23 தனியார் நிறுவன ஊழியர், மதுரை

நா ன் முதல்வன் திட்டத்துல வேலை கொடுக்குறோம்னு சொல்றாங்க. ஆனா நிறைய பேருக்கு வேலையில்ல. தேர்தல ஒட்டிதான் லேப்டாப் தர்றாங்க. அப்போ, முந்தைய ஆண்டு பசங்களுக்கு?

விக்கிரவாண்டில விஜயோட முதல் மாநாட்டுல, எந்த கட்சியையும் தரக்குறைவா பேச வேணாம்; நாம எப்படி நல்ல அரசியல் பண்ணலாம்ங்குற மாதிரி பேசிருப்பாரு. அப்பதான் அவருக்கு ஓட்டு போடணும்னு நெனச்சேன். ஆனா, அதுக்கப்புறம் நடந்த ஒவ்வொரு மாநாடு, கூட்டத்துலயும் மத்தவங்கள தாக்கி தான் பேசுறாரு. கரூர்ல, 41 பேர் இறந்தப்போ அவங்களோட நின்னுருக்கணும். பெண்களுக்கு எதிரா நடக்கும் அநியாயங்களை கொஞ்சம்கூட கண்டுக்கல. விஜயோட அரசியல் பாதை மாறிடுச்சு. இளைஞர்களின் பலம் அவருக்கு பிளஸ். அதை சரியா பயன்படுத்திக்கிட்டா திராவிட கட்சிகளுக்கு மாற்றா வரலாம். ஆனா, அவங்களுக்கு மெச்சூரிட்டியே இல்ல.

இப்போ இருக்க நிலைல ஸ்டாலினுக்கே என் ஆதரவு. கொலை, போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமைகளை, இரும்புக்கரம் கொண்டு அடக்கி நல்லாட்சி வழங்கணும்.

Advertisement