Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் ஓட்டு!

 தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் ஓட்டு!

ம.நாகபாண்டி, 28,பயிற்சி வழக்கறிஞர், புதுப்பட்டி, சிவகங்கை

தி .மு.க., அரசு மக்கள் விரோத அரசு. கடந்த தேர்தலில், 'நீட் தேர்வை ரத்து செய்வோம்; பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்றனர். ஆனால் நிறைவேற்றவில்லை. சட்டம் - ஒழுங்கை முறையாக கையாளவில்லை. தடுக்கப்பட வேண்டிய போதைப் பொருட்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சகஜமாக பயன்பாட்டில் உள்ளன. குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த குற்றங்களைத் தடுக்கும் வகையில், எந்த நடவடிக்கையும் இந்த ஆட்சியில் இல்லை. அதிகமான லாக்கப் மரணங்கள் இந்த ஆட்சியில் தான் நடந்துள்ளன.

மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ., அரசு, உலக அரங்கில் நம் நாட்டின் அறிவுறுத்தல்களுக்கு மற்ற நாடுகளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மருத்துவ சேவை, போக்குவரத்து சேவை, எய்ம்ஸ் மருத்துவமனை, வந்தே பாரத் ரயில் எ ன அனைத்து துறைகளிலும் முன்னேற்றி வருகிறது. எனவே, இம்முறை, அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் என் ஓட்டு.

Advertisement