Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இடதுசாரி அரசியல் வளர்ச்சிக்கு தடை!

இடதுசாரி அரசியல் வளர்ச்சிக்கு தடை!

விஷ்ணு சங்கர், 21 பொறியியல் மாணவர், திண்டுக்கல்

என் அரசியல் நிலைப்பாடு தமிழ் தேசியத்துடன் இணைந்தது. கம்யூனிச சித்தாந்தம் மூலம் ஈர்க்கப்பட்டேன். ஆனால், இடதுசாரி அரசியல், நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை, நானும் என் நண்பர்களும் உணர்ந்தோம். தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் இலவசங்களை அறிவித்துள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில், சுயசார்பு பொருளாதாரத்திற்கு அடிப்படையாக, சோலார் மின் கட்டமைப்பு, கட்டணமில்லா குடிநீர், ஆறுகளை இணைக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அக்கட்சியின் தேர்தல் அறிக்கை மட்டுமே வித்தியாசமாக, ஆக்கப்பூர்வமாக உள்ளது. ஆனால், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதுபோல், மாற்றி மாற்றிப் பேசி வருகிறார்.
இதில், தி.மு.க.,வின் கொள்கையில் நான் மாறுபட்டாலும் தி.மு.க., அரசு அறிவித்துள்ள வளர்ச்சித் திட்டங்களான நான் முதல்வன் திட்டம், இலவச லேப்டாப் வழங்குதல், நுாலக மேம்பாடு போன்றவை என்னைப் போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அதனால், தி.மு.க.,விற்கு தான் என் ஓட்டு.

Advertisement