Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


லஞ்சம் கொடுக்காம எந்த வேலையும் நடக்கிறதில்ல!

லஞ்சம் கொடுக்காம எந்த வேலையும் நடக்கிறதில்ல!

கே.ஹர்ஷினி, 20 கல்லுாரி மாணவி, திண்டுக்கல்

எ ங்கள் குடும்பமே பரம்பரையாக தி.மு.க.,விற்கு தான் ஓட்டு போடுவர். அதனால எங்க அப்பா தி.மு.க.,விற்கு தான் ஓட்டு போட சொல்லுவாரு. ஆனா இந்த தடவை நிச்சயமா அந்த கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன்.

அந்த அளவுக்கு என்னை ஏமாத்திட்டாங்க. நான் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் தான் படிச்சேன். ஆனா அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவியருக்கு தான் காலேஜ்ல இலவச லேப்டாப் கொடுத்தாங்க. எனக்கு கொடுக்கவே இல்ல.

அதனால இந்த முறை த.வெ.க., விஜய் அண்ணாவுக்கு தான் என் ஓட்டு. அது மட்டும் இல்லாமல் விஜய் அண்ணாவை அரசியலுக்கு வரவிடாமல் நிறைய இடையூறு கொடுக்கிறாங்க இந்த கவர்மென்ட்.

இந்த ஆட்சியில பெண்களுக்கு எதிரா நிறைய குற்றங்கள் நடக்குது. எங்கு பார்த்தாலும் தாராளமா மது விக்கிறாங்க.

இதனால நிறைய பேரு கெட்டு போறாங்க. லஞ்சம் கொடுக்காம அரசு அதிகாரிகளிடம் எந்த வேலையும் நடக்க மாட்டேங்குது. இதையெல்லாம் மாற்ற, விஜய் தான் வர வேண்டும்.

Advertisement