Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தீபம் ஏற்றாமல் விட்டது சமூகநீதியா?

தீபம் ஏற்றாமல் விட்டது சமூகநீதியா?

ஆர்.சித்தேஸ், 23 கல்லுாரி மாணவர், ராமேஸ்வரம்

தி .மு.க.,வினர் சமூகநீதி, சமூக நல்லிணக்கம் என கூறிக்கொண்டு, ஒருதரப்பு மக்களை குளிர வைப்பதற்காக, பிற சமூக மக்களின் பண்பாட்டை நசுக்கி வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், அரசு கண்டுகொள்ளாமல் நாடகமாடியது வேதனைக்குரியது. பட்டிதொட்டி எங்கும் கஞ்சா, மது விற்பனை தாராளமாக உள்ளது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகின்றனர்.
தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் சாதாரணமாக நடப்பதால், சட்டம் - ஒழுங்கு சீரழிந்து விட்டது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வை கூட முறையாக நடத்த முடியாமல் அரசு திணறியது, ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. இளைஞர்கள் வேலையின்றி சிரமப்படுகின்றனர். இதற்கெல்லாம் தி.மு.க., அரசு தான் காரணம்.

விஜய், அரசியல் அனுபவம் இல்லாமல் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். அவரது செயல்பாடுகளை, பொறுத்திருந்து பார்க்கலாம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் மோடியின் தாமரை சின்னத்திற்கு தான் என் ஓட்டு.

Advertisement

ஏப் 09, 2026 08:26 pm

ஹை சித்தேஷ் நீ ஒரு சோம்பு thookkiya?

Reply Rate this
ஏப் 09, 2026 09:32 am

சிறப்பு

Reply Rate this
ஏப் 07, 2026 08:19 am

சூப்பர் சரியான முடிவு

Reply Rate this
ஏப் 07, 2026 07:58 am

சூப்பர் சூப்பர் இன்றைய GENZ தலை முறை சிறப்பாக சிந்திக்கிறார்கள்....

Reply Rate this