சட்டம் -- ஒழுங்கில் சறுக்கும் தி.மு.க.,
ஜெ.தமிழரசன் ஜெயக்குமார், 22 கல்லுாரி மாணவர், மதுரை
தி .மு.க., அரசின் மகளிருக்கான இலவச பஸ் பயணம் முதல் இளைஞர்களுக்கான 'நான் முதல்வன்' வரை அனைத்து திட்டங்களும் பயனுள்ளவை. தொடர்ந்து கல்வி, பொருளாதாரம் சார்ந்து திட்டங்கள் கொண்டு வரப்படுவதால், இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர்ந்து வருகிறது. ஆனாலும், தி.மு.க., அரசு சட்டம் -- ஒழுங்கு விஷயங்களில் சறுக்குகிறது. ஆணவ படுகொலைகள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து விட்டன. அவற்றை தடுக்க எவ்வித முனைப்பும் காட்டவில்லை.
போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. பள்ளி - கல்லுாரி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
என் தொகுதி தி.மு.க., வேட்பாளர் தியாகராஜன், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அரசியல்வாதி. அவரது தொலைநோக்கு பார்வை, நேர்மை, பேச்சு போன்றவை என்னை கவர்ந்து விட்டதால், அவரை ஆதரிக்க உள்ளேன். அவரின் கல்வித்தகுதியும் அரசியல் அறிவும் இத்தொகுதியில் தி.மு.க.,வின் வெற்றிவாய்ப்பை அதிகரித்துள்ளன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்