Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


நாட்டை காப்பாற்ற சீமானால் மட்டுமே முடியும்!

  நாட்டை காப்பாற்ற சீமானால் மட்டுமே முடியும்!

மனோஜ்குமார், 20 வீரிருப்பு, சங்கரன்கோவில்

சீ மான் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்துகிறார். அதற்காக பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார். இலவசங்கள் கூடாது என்கிறார். அதற்கு பதில் வேலைவாய்ப்பை தருவதாக கூறுகிறார்.

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மாறி, மாறி பலமுறை ஆட்சி செய்தும், மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. இலவசங்களை இரு கட்சிகளும் வெவ்வேறு வழிகளில் திணிக்கின்றன. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இரண்டு கட்சிகளுமே கனிமவள கொள்ளையை ஊக்குவிக்கின்றனர்.

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் இருந்த அரசியல்வாதிகள் தான், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். பிறகு எப்படி, ஊழல் இல்லாத ஆட்சியை அக்கட்சி தலைவர் விஜயால் கொடுக்க முடியும். மாற்று அரசியல் என்று மக்கள் கவனத்தை ஈர்த்தாலும், தி.மு.க., - அ.தி.மு.க.,வின் திராவிட அரசியலை தான் விஜய் செய்கிறார். இலவசங்களால், நாடே கடனில் மூழ்கி கொண்டிருக்கிறது. நாட்டை காப்பாற்ற சீமானால் மட்டுமே முடியும்.

Advertisement