திராவிட கட்சிகளுக்கு விஜய் தான் மாற்று!
கீர்த்தனா, 24 வழக்கறிஞர், மதுரை
ரொ ம்ப ஊழல் நடக்குது. பெண்களுக்கு பாதுகாப்பில்ல. மதுரைல கஞ்சா புழக்கம் அதிகமா இருக்கு. தி.மு.க., ஆட்சியில நிறைய பிரச்னை இருக்கு. அது மக்களுக்கே நல்லா தெரியும்.
மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம் போன்றவை மக்களை, குறிப்பா பெண்களை ஏமாத்தும் திட்டங்கள். இது எல்லாமே நம்மளோட காசு தான். மக்களோட வரிப்பணத்த தான் இனாம்ங்குற பேருல கொடுக்குறாங்க. இதனால கடன் சுமை தான் அதிகரிக்கும். அவங்களோட சொந்த காசு ஒண்ணும் கொடுக்கலயே. பணம் சம்பாதிக்கும் நோக்குல குடும்ப ஆட்சி நடத்துறாங்க. அவங்க திரும்ப ஆட்சிக்கு வரக்கூடாது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றா விஜய் இருப்பாரு. மக்களுக்கு நல்லது பண்ணுவாரு. தலைக்கனம் இல்லாம மனிதாபிமானத்தோட இருக்காரு. பணம் சம்பாதிக்க அரசியல் பண்ணுறவங்களுக்கு மத்தியில, தான் சம்பாதிச்ச பணத்த மக்களுக்காக செலவு செய்ய அரசியலுக்கு விஜய் வந்துருக்காரு. அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும். என் ஆதரவு டி.வி.கே.,வுக்கு தான். அவர் தனித்து போட்டியிடுறது தான் நல்லது. இளைஞர்களின் ஓட்டு அவருக்கு இருக்கிறதால நிச்சயம் ஜெயிப்பாரு.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்