'சினிமா டயலாக்' போல் பேசும் விஜய்!
கல்பனா, 22 விருதுநகர்
நா ட்டில் பெரும் பிரச்னையாக இருப்பது பொது இடத்தில் குப்பை கொட்டுவது தான். பார்க்க சாதாரணமாக இது தோன்றினாலும், பெரும் நோய் ஏற்பட காரணமாகிறது. மழை பெய்தால் சாலையில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து ஓடுகிறது. தேர்தல் நேரம் மட்டும் ரோடு போடும் 'கல்ச்சர்' வேண்டாம்.
இன்னொரு பக்கம், இளைஞர்களை பாழாக்கும் போதையால் எதிர்காலமே கேள்விக்குள்ளாகி வருகிறது. போதைக்கு அடிமையாகி வேலைவாய்ப்பை மட்டுமில்லாமல் தங்கள் வாழ்க்கையையே இழக்கின்றனர்.
விஜய், அரசியலில் பேச்சோடு நின்று விடாமல் செயல்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர் பேசுவதெல்லாம் நடக்குமா என்று கேள்வி எழுகிறது. அவர் பேசுவது சில நேரங்களில் 'சினிமா டயலாக்' போல் இருக்கிறது. ஒரு கட்சியை எதிர்த்து பேசுவது மட்டும் என்ன வகையான அரசியல் என்று தெரியவில்லை.
இளைஞர்களுக்கு நிறைய ஆதரவு தரும் ஆட்சி அமைய வேண்டும். வெறும் சினிமாவை அடிப்படையாக கொண்டு தலைவர்களை இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்